Pages

Saturday, March 27, 2021

What is Pyramid Scheme, how it works

 விரைவாக பணம் சம்பாதிக்க ஒரு வழி.

அதுவும் ஒரு மாதத்தில் 50 இலட்சம்.
வீட்டிலிருந்தவாறு சம்பாதிக்கலாம்.
உங்கள் வியாபாரம் முழுவதுமாக மொபைல் போனில்தான்.
வாங்க இறங்கி விளையாடலாம் 5 மாதத்தில் கோடிகள் சம்பாதிக்கலாம்.


நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு குழு இந்த வியாபாரத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறது. இவர்களின் வியாபாரம் பற்றிய முக்கிய பாய்ன்ட்ஸ் முதலில்.
1. இலகுவான வியாபார முறை, நல்ல இலாபம், கஷ்டப்பட தேவையில்லை.
2. Zoom meetingக்கு வாங்க.
3. எல்லோரையும் சேர்ப்பதில்லை, உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு
4. கிட்டத்தட்ட 220 அமெரிக்க டாலர் பணம் கட்ட வேண்டும். 250,000 உறுப்பினர்கள் உலகம் பூராவும் இருக்காங்க.
5. பிறகு நீங்கள் 10 முதல் 20 பேர் வரை சேர்க்க வேண்டும்.
6. புதிய சோசியல் மீடியா வருது. அதுல பங்குகள் கிடைக்கும்.
7. போஸ்ட் share , லைக் செய்தால் அதிக பணம் கிடைக்கும்.
8. நீங்கள் சோசியல் மீடியாவில் அவர்களின் பதிவு போட்டு விளம்பரம் செய்தால் பணம் கிடைக்கும்.
9.. எனக்கு இந்த வியாபாரம் முன்பே தெரியும் என்றால் ஜப்பான் போயிருக்க மாட்டேன்.
10. ஒரு நாளைக்கு உங்கள் முதலீட்டில் கிட்டத்தட்ட 1% இலாபம் கிடைக்கும். அது ஒரு மாதத்திற்கு 20% இலாபம்.
அதாவது payback period 5 மாதங்கள். உங்கள் முதலீடு 5 மாத்த்தில் திரும்பக் கிடைக்கும். (இதற்கு தகுதி பெற சில கடினமான targets களை அடைய வேண்டும்.)
11. 5 மடங்கு இலாபம் தரப்படும்.
12. அடுத்தது இரண்டாம் block இல் முதலீடு செய்யலாம்.
13. வெளிநாட்டு நாணய (foreign currency மற்றும் crypto currency வியாபாரத்தில் ஈடுபடுகிறார்களாம்.
14. உங்களிடமிருந்து எனக்கு இலாபம், உங்களுக்கு நீங்கள் சேர்ப்பவர்களிடமிருந்தும், எனக்கு மேல் இருப்பவர்கள் எங்களிடமிருந்தும் இலாபம் எடுப்பார்கள்.
சொல்வது நன்றாகத்தானே இருக்கிறது. நல்ல இலாபம் பேசாம இறங்கிறுவோம். பிரபல்யமானவர்கள் கூட இருக்காங்கலாம்.
சரி, அவர் கூறிய வியாபார முறையில் இருக்கும் சில நடைமுறைக்கு, சாதாரண வியாபார முறைக்கு ஒத்துவராத விடயங்களை முதலில் பார்ப்போம்.
இவ்வளவு இலாபம் தரும் வியாபாரத்தை யார்தான் உலகம் பூராவும் பரப்பி இலாபத்தை பிரித்துக் கொடுப்பார்கள். உண்மையில் அவர்கள் எவ்வளவு தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இந்த வியாபார முறையில் முதலில் அதிக ஆசைகாட்டி மூளைச்சலவை செய்யப்படுகிறது. நட்டங்கள் ஏற்படும் பகுதி பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள்.
சட்டரீதியான எந்த வியாபாரத்தில் வருடத்திற்கு 240% இலாபம் பகிர்வு கிடைகிறது. வெளிநாட்டு மற்றும் crypto நாணய வியாபாரத்தில் இவ்வளவு இலாபம் எடுக்க முடியாது. அந்த சந்தையும் பாரிய ஏற்றத்தாழ்வை கொண்டது.
இவர்களின் இந்த வியாபார முறையில் பிரதான இலாபம் கிடைப்பது இந்த network கில் சேருபவர்களின் முதலீட்டில் இருந்துதான். ஒருவரின் முதலீடு அடுத்தவர்களுக்கு விகிதாசார முறையில் இலாபமாக பகிரப்படுகிறதே தவிர எந்த வியாபாரமும் நடைபெறுவதில்லை, முதலீடு நடைபெறுவதுமில்லை.
இதில் பணம்போட்டு ஏமாந்தவர்கள் வெளியில் சொல்வதில்லை, அது ஏன் என்று நமக்கு தெளிவாகவே தெரியும்.
இந்த பிரமிட் முறையில் கணிதப்படி குறிப்பிட்ட படிமுறைகளுக்கு மேல் போக முடியாது. ஏனெனில் இந்த வியாபாரத்தில் முதலீடு செய்ய ஆள் இருக்க மாட்டார்கள். எனவே இதில் இறுதி இரண்டு மூன்று படிகளில் இருப்பவர்கள் தங்கள் பணத்தை இழந்துவிடுவர். முதலீடு செய்பவருக்குத் தெரியாது ஊரில் எத்தனை பேர் மிச்சம் இருக்கிறார்கள் என்று. அதாவது 5 பேர் தொடர்ந்து 5 என மடங்காகினால்.
முதல் படியில் 5 பேர்
இரண்டாம் படியில் 25 பேர்
மூன்றாம் படியில் 635 பேர்
நான்காம் படியில் 390,625 பேர்
ஐந்தாம் படியில் 152,587,890,625 பேர்
அக்குறனையில் முதலீடு செய்யக்கூடிய அனைவரும் இதில் முலீடு செய்தால் நான்காவது படிக்கு மேல் போக முடியாது. ஏனெனில் அடுத்து இனைப்பதற்கு மடவளைக்குச் சென்று ஆள் தேட வேண்டும். ஆனால் அக்குறனையில் இருக்கும் ஒரு பத்தாயிரம் உறுப்பினர்கள் மடவளையில் இருக்கும் 2,000 ஐ பிடிக்க சண்டை போட வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. நான் சொன்ன உதாரணம் கோட்பாட்டு ரீதியாக இருந்தாலும். உண்மையில் அடுத்த படிநிலைக்கு ஆள் தேட முடியாமல் பலர் இதிலிருந்து விழகிவிடுவர். பணம் பூரா அல்லது பகுதி நட்டப்பட்டிருப்பார். மெளனமாகவே இருப்பார்.
வியாபாரம் என்பது ஒரு சுழற்சி முறையில் நடக்க வேண்டும். மீள் சுற்றில் நடைபெற வேண்டும். ஆனால் இங்கு கீழிருந்து (downline) மேலாகவே (upline) அதிக பணம் நகர்கிறது. இடையில் இந்த நெட்வேர்க் எந்த இடத்திலும் அதாவது ஒருவர் செயலற்றுப்போனால் தொடர்ந்து அவரிடம் தங்கியிருக்கும் பலருக்கு நட்டம் ஏற்படும்.
இது சட்டரீதியற்ற (illegal ) வியாபாரம் என்று சொன்னால், இவர்கள் MLM அடிப்படையில் இயங்கும் சட்ட ரீதியான கம்பனிகளை உதாரணம் காட்டுவார்கள். இந்த கம்பனிகளில் அதிகமானவை ஏமாற்றம் தான் செய்கின்றன. அது பொருட்களை வாங்கி விற்கிறோம் என்ற அடிப்படையில் சட்டரீதியான நிலையில் இருந்தாலும் பலரும் இதில் ஏமாற்றமடைந்த கதைகள் நிறையவே இருக்கு. இங்கு MLM/Network marketing என்றாலே பிழையென்று இல்லை. இவைகள் சிறந்த ஒரு விநியோக முறை. ஆனால் இந்த முறையைப் பயன்படுத்தி நடக்கும் pyramid scheme முறைதான் ஏமாற்று. Pyramid மோசடி என்று சொல்வதற்கு காரணம் இந்த திட்டத்திற்கு வரையரையான (limited) மனிதர்கள் இருப்பதால் ஆள் சேர்ப்பதன் மூலம் இலாபம் அடையவது தொடர்ந்து சாத்தியமில்லை.
MLM மூலம் pyramid scheme அல்லாமல் சட்டத்திற்கு அமைவாக நடக்கும் வியாபாரத்தில் வேறு பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. இது ஒவ்வொரு நிறுவனத்தைப் பொருத்து வேறுபடும். சில தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வது, சரியாக கமிஷன், இலாப பகிர்வு கொடுக்கப்படாமை, return அல்லது complain செய்வது கடினமாக இருத்தல் போன்ற மேலும் பல.
சில MLM கம்பனிகள் இலாபத்தை நெட்வர்க் மூலம் பகிர்கிறோம் கமிஷன் கொடுக்கிறோம் என்று சொல்லி பொருட்களை நெட்வர்க்கில் இருப்பவர்களே வாங்க வேண்டிய நிலைக்கு கொண்டு சென்று அதிக டார்கட் அடைந்தால் அதிக பணம் என்று சொல்லும் போது அதை எடுக்க சொந்த பணத்தை மீண்டும் இதில் போட வேண்டும்.
Multi Level Marketing / Network marketing என்பதற்கு இந்தளவு எதிர்மறை நோக்கு (Negative Perspective ) ஏற்படுவதற்கு இந்த pyramid scheme ஐ இதில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ புகுத்துவதனால்தான். சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பாக வியாபாரங்களுக்கு மிகவும் பயனுள்ளவை இந்த NM/MLM. இதனால் நல்ல பலன்கள் பொதுமக்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இருக்கின்றன. சில நிறுவனங்கள் இவற்றை சட்டரீதியாக முறையாக உபயோகிக்கின்றன.
ஒரு MLM முறையில் இனையமுன் பின்வறுனவற்றை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
1. விறகப்படும் பொருட்கள்/சேவை நன்கு பிரபல்யமான பாதுகாப்பான பிரயோசனமான பொருட்களாக இருத்தல்.
2. இந்த கம்பனி பற்றி நன்றாக அறிந்திருத்தல்.
3. பொருட்கள் தொடர்பான முழுமையான விளக்கத்தை நிறுவனம் வழங்கி விற்பனையாளருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
4.நிறுவனம் நீதியாக நடப்பதுவா என அறிந்திருத்தல். Ethical management.
5.Business model ஐ அறிந்திருத்தல்.
6.இந்த MLM ல் எனது நெட்வேர்கில் இந்த பொருட்கள் திரும்பத்திரும்ப விற்க முடியுமா!
7.நானே இறுதியாக இந்த நெட்வேர்க்கில் இருந்தால் எனது இலாபம் எவ்வாறு இருக்கும்.
கால வரையறைகள் இருக்கிறதா.
எப்படி இந்த Pyramid மற்றும் MLM முறையை வேறுபடுத்திக் கொள்வது.
1.இலாப பகிர்வும். கம்பெனியின் அழுத்தமும் ஆள் சேர்பதிலே இருந்தால் அது சட்டரீதியற்ற பிரமிட் முறை. நட்டம் வெகு விரைவில் கிட்டும் அடுத்தவர்களை ஏமாற்றாதவரை.
2.தனியே ஆள் சேர்ப்பது மாத்திரம் வியாபாரமாக இருந்தால் அது மோசடி வியாபாரம்.
3.பொருட்களை அதிக விலையில் உறுப்பினர்களுக்கு விற்றால் அல்லது உறுப்பினராக வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவு பொருட்கள் வாங்க வலியுறுத்தினால் அது முறையற்ற MLM.
4.Compensation scheme ஐ நன்றாக பரிசோதனை செய்ய வேண்டும். இரகசியமாக வைக்கவோ அல்லது தெளிவில்லாமலோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் அது முறையற்ற MLM.
5.குறுகிய காலத்தில் அளவுக்கதிகமான இலாபம். MLM scam.
6.அதிக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக ஒருவரை உதாரணம் காட்டினால் அது pyramid scam.
7.அறிமுகற்ற பொருள் அல்லது சேவை வியாபாரம் வெளிநாட்டு தொடர்புள்ள அல்லது பிரதான முகவர் வெளிநாட்டில் இருந்தால் அது pyramid scam ஆக இருக்கவே அதிக வாய்ப்பு.
8.கிரிப்டோ கரன்சி அல்லது வெளிநாட்டு நாணய சந்தையில் MLM முறையில் முதலீடு செய்வது நம்பகத்தன்மை இல்லாத்து. Googleல் தேடிப்பாருங்கள். 9.அதில் அடைய முடியாத இலாபத்தை தருவதாக சொல்வது வேடிக்கை.
10.சிறு இலாபம், கஷ்டப்பட்டு உழைத்தல் தான் இதிலுள்ள சாதாரன வியாபார முறை.
அடுத்தது முகநூலில் பகிர்வுகளுக்கோ லைக் குகளுக்கோ பணம் கிடைப்பதில்லை. அப்படி உங்கள் முகநூல் கணக்கில் ஒரு பதிவு போட ஒருவர் இலட்சங்களில் தருவாரா? அப்படி இலாபம் தரக்கூடிய பொருள் என்ன இருக்கு.?
ஒரு வியாபாரத்தில் இணைவாதானால் முதலில் அந்த Business Model ஐ பற்றி நன்றாக படித்துக் கொள்ளுங்கள். நெட்வேர்க் மார்கடிங்/ MLM , Pyramid scheme என்றால் என்ன, குறித்த வியாபாரம் இதல் எந்தவகை.
இலங்கையில் Banking Act 30 of 1988 (amended) படி இவ்வாறான pyramid scam மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையாக 3 வருட சிறையும் 1 மில்லியன் ரூபா தண்டமுமாகும். இந்த குற்றம் அடுத்தவருக்கு தீங்கு ஏற்படுமானால் 5 வருடம் வரையிலான சிறையும் 2 மில்லியன் தண்டமும் வழங்கப்படும்.
இப்படி ஒரு வியாபார முறையை அதாவது அது pyramid scam வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் உங்களை அணுகினால் அதை இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்கலாம்.
Financial Intelligence Unit
Central bank of Srilanka
Tel 0094 112477509
Email - fiu@cbsl.lk
Email - dfiu@cbsl.lk
Email- director@fiusrilanka.gov.lk
Email - info@fiusrilanka.gov.lk
மேலதிக தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மத்திய வங்கியின் அறிக்கை,
நிதி புலனாய்வுப் பிரிவு
Sri Lanka press institute warning -
இந்த செய்தியின் தமிழாக்கம் அதன் இறுதிப்பகுதியிலுள்ள லிங்கில் இருக்கு
TED வீடியோ.
தமிழில் வீடியோ
Pyramid scheme பற்றிய செய்திகள் ஆய்வுகள் நிறையவே google மற்றும் யடிவூப்பில் இருக்கிறது. அவற்றைத் தேடிப்பார்த்து உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். MLM/Pyramid scheme பல இப்போது நடைமுறையில் இருப்பதால் ஒவ்வொன்றும் வித்தியாசமான compensation and business model ஐ கொண்டிருப்பதால். பொதுவாகவே எழுத முடிந்தது. ஆனாலும் இந்த வியாபர முறையில் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க மோசடிகளையே பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் நெட்வேர்கிங் மென்டோர்ஸ் செய்கிறார்கள்.
இந்த MLM/ Network marketing என்பன விரிவான விடயமாகும். முடிந்தவர்கள் ஆழமாக படித்து ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்துங்கள். உங்கள் சிறு வியாபாரத்தையும் விரிவு படுத்தலாம்.
இறுதியாக மார்க்கத்தில் MLM பற்றிய நிலை தொடர்பாக நான் ஒன்றும் கூறவில்லை அது மார்க்க அறிஞர்களின் பொறுப்பு. ஆனால் Pyramid scheme என்பது அனுமதியற்றதாக இருப்பதற்கு அதில் உள்ள ஏமாற்று வித்தைகள் போதும்.

No comments:

Post a Comment

Scam - Antares pyramid in Sri Lanka

 Scam alert - Antares முதலீடு இலங்கையில்!!!! பெல்ஜியம், கனடா, ஸ்பெய்ன் நாடுகள் எச்சரிக்கை! Antares pyramid scheme- இதற்கு இப்போது இலங்கையில்...