(தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் குறிப்புடன்)
இந்திய எல்லைக்கு வெளியே பாடநெறிகளை நடாத்த இந்தியாவின் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு (UGC India) இந்திய பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி நிறுத்தியிருக்கிறது. அது தொடர்பாக இந்திய அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியின் ஒரு பகுதி இணைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குறித்த சில பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரம் விஷேட அனுமதியுடன் இந்தியாவுக்கு வெளியே பாடநெறிகளை நடாத்த அனுமதி வழங்கி இருக்கிறது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள கீழே குறித்த பல்கலைக்கழகம் இல்லை. அஅவர்களது இணையதளத்தில் இதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
Online degrees (ODL - Open Distance Learning)
(இணையவழிக்கல்வி)
2021 ஆம் ஆண்டு (இந்த ஆண்டு) விஷேட ஒரு ஏற்பாடாக பல பல்கலைக்கழகங்களுக்கு இணையவழிக் கல்வியை வழங்க அனுமதி வழங்கியிருக்கிறது. அது தொடர்பான UGCயின் தொலைக்கல்வி முகாமை செய்யும் ஒரு பிரிவான DEB (Distance Education Bureau) வின் இணையதளத்தில் அனுமதித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கற்கைநெறிகள் விவரங்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் ஆரம்பித்துள்ள இணையவழிப் பாடநெறிகளை நன்கு ஆராய்ந்து நீங்கள் முகவரின் எந்த தலையீடுமின்றி கற்கலாம்.
Directorate of Distance Education
(தொலைநிலைக்கல்வி)
இலங்கையில் பரவலாக பேசப்பட்ட அலகப்பா பல்கலைகழகத்திற்கு தொலைக்கல்வி (DDE) மூலம் இந்தியாவில் மாத்திரமே கற்கைநெறிகளை நடாத்த UGC India அனுமதித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களின் இணையதளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளனர். சிலது இங்கே இணைக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம். அலகப்பா பல்கலைக்கழகத்தின் அனுமதிபெற்ற 176 கற்கை நிலையங்கள் அனைத்தும் அதன் இணையதளத்தில் இருக்கின்றன. அனைத்துமே தமிழ்நாட்டில் இருப்பவைகள். இலங்கையில் எதுவும் இல்லை.
இந்திய அரசாங்க வர்த்தமானியின் படி இந்தியாவிற்கு வெளியே உபபிரிவாகவோ, கற்கைநிலையமாகவோ, முகவராகவோ பாடநெறிகளை நடாத்த அனுமதியில்லை. இந்தியாவிலும் கூட UGC அனுமதித்த இடத்திற்கு (முகவரி) வெளியே கற்கைநிலையங்களை ஆரம்பிக்க முடியாது.
அலகப்பா பல்கலைக்கழகம் இலங்கையில் கடந்த வருடங்களில் தாம் எந்த பட்டமும் வழங்கவில்லை என்றும் அப்படி யாராவது தற்போது பெற்றால் /வழங்கினால் அது செல்லுபடியாகாது என குறிப்பிட்டார்கள்.
பின்வரும் இணையதளங்களில் அவர்களின் கற்கைநெறிகள் எவ்வாறானது என அறியலாம்.
How they offer their degrees.
Tamil University Thanjavur
Alagappa
Alagappa online
Kamaraj university
No comments:
Post a Comment