யுனிசெப் ரிபோர்ட்டை பார்த்த Mendy, 1 ரில்லியன் டொலர் வியாபாரம், வருமான பங்கீடு, வறுமை, 100% உறுப்பினர்களுக்கான இலாப்ப் பங்கீடு.
ஹிந்தி, மலையாளம், தமிழ், bபங்காளி, வியட்நாமீஸ் மற்றும் இலங்கையிலும் ஓடும் ஒரே டெம்லேட் இதுதான்.
சரி, Vitae Social media launch பன்னலாம் பன்னாமலும் போகலாம். அதன் பின்னணி பற்றி அறிந்திருப்பது நல்லது.
இதை ஆரம்பித்தது Michael Weber எனும் ஒரு தொடராக பல crypto currencies ஐ pyramid முறையில் அறிமுகப்படுத்தி பலரின் பணத்தை ஆட்டைய போட்டவர்தான். இவர் pyramid scams செய்த X100K (2016), PIF2cash (2016), coin nuggets (2017), Bitconnect (2018 jan) ஆகியன கிரிப்டோ நாணயங்களாகும். இவை இப்போது இல்லாமல் போயுள்ளன. இறுதியாக அறிமுகப்படுத்தியது Vitae Token (2018 June). இவருடைய தனித்திறமையாக பலரும் குறிப்பிடுவது matrix முறையில் pyramid திட்டங்களை உறுவாக்குவதாகும். இந்த Vitae Social Media மூலம் Vitae Token க்கான கேள்வியை அதிகரித்து கிரிப்டோ சந்தையில் Vitae token விற்பனை செய்வதற்கு திட்டமிட்டு, Vitae நாணயம் ஒரு Utility Token என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கான இலாபம்(?) இதன் மூலம் வழங்கப்படுகிறது.
Michael Weber பற்றி பாதகமான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் இருப்பதால் இப்போது அவரை Vitae யின் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளில் முன்னிலைப் படுத்துவதில்லை. 2018 முதல் pyramid scheme மூலம் பணம் சேர்க்க ஆரம்பித்தாலும் அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை. அதன் பிறகு இவரின் பங்காளர்களான Mendy Zickerman ( Jew ) , Shrage (Jew ) இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். 2019 இன் பின் Michael Weber எந்தவித செயல்பாட்டையும் காட்டவில்லை மேலும் உரிமையாளர் பட்டியலில் அவருடைய பெயரும் இல்லை. இணைப்பை பார்க்க.
2018 இல் ஆரம்பித்திருந்தாலும் 2019 ஆகஸ்ட் 22 ஆம் திகதி சுவிசர்லாந்தில் சுவிஸ் பிராங்க் 9,975 ( SL Rs. 22இலட்சம்) மூலதனத்துடன் ஒரு தனியார் கன்பனியாக பதிவு செய்துள்ளார்கள். இலங்கையில் ஒரு முகவர் Vitae இல் pioneer members அனைவருக்கும் 20 பங்குகள் தருவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். இந்த கம்பனி முறையாக பதிவு செய்திருந்தாலும் ஒரு நிறந்தர காரியாலய முகவரி இல்லை. வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையாக கூட இருக்கலாம். இதன் தற்போதைய உரிமையாளர்கள் Mendy Zickerman, Shrage, Michal Roland , Martin ஆகியோராகும்.
இந்த சமூகவலைத்தளம் 2019 Q3 இல் public launch செய்வதாக Vitae team அறிவித்திருந்தது அத்தோடு புதிய நெட்வேர்க் மார்கடிங்கையும் ஆரம்பித்தது. ஆனால் 2018 டிசம்பரில் அறிமுகமான beta version ஐ வைத்துக்கொண்டே காலம் தள்ளியது. அதைத்தொடர்ந்து பல திகதிகள் அறிவிக்கப்பட்டும் ஒன்றும் வேலைக்காகவில்லை. 2019, 2020 q1, 2020 q3, 2020 q4, 2021 Jan, 2021 1st Feb, இப்போது இந்த வருடமாம் ஆனால் திகதி சொல்ல முடியாதாம். Technical problem என்று சொன்னாலும் pyramid scheme ல ஆள் சேர்ப்பதில் மிகவும் தீவிரம் காட்டுகிறார்கள்.
இந்த சோஷியல் மீடியா, Facebook போல் இயங்கும் ஆனால் உறுபினர்களின் நடவடுக்கைகளுக்கு பணம் தரப்படும். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையில் அவர்களுடைய வியாபார முறை சரியாக விளங்கப்படுத்தப்படவில்லை. விளம்பரம் இல்லாத social media என்று சொன்னாலும், விளம்பர வருமானம் பகிர்ந்தளிக்கப்படுமாம், ஆனால் கோடிகளில் உறுப்பினர்களுக்கு் கொடுக்க cash flow எவ்வாறு முகாமைப்படுத்தப்படும் என சொல்லப்படவில்லை. இதற்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் Vitae Token உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். நீங்கள் red member ஆகாமல் இருக்க ஒவ்வொரு மாதமும் 200 டாலர் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். நீங்கள் பதிவு போட்டால் அதற்கு காசு அறவிடப்படும். Share செய்தாலும் காசு அறவிடப்படும். ஆனால் உங்கள் பதிவை மற்றவர்கள் ஷெயார் செய்தால் அதற்கு பணம் கிடைக்குமாம். இந்த தளம் எதிர்காலத்தில் வரலாம் வராமலும் போகலாம். ஆனால் இப்போது 3 வருடமாக Beta version ல இருப்பது பரீட்சார்த்த நடவடிக்கை மட்டுமே, ஒரு வியாபாரமும் நடப்பதில்லை. அப்படி இருக்கையில் இதிலிருந்து எப்படி இலாபம் கிடைக்கும். அதற்குத்தான் pyramid scheme இருக்கிறதே அடுத்தவன் காசு இன்னொருவனின் இலாபம்.
கடந்த வருடம் November இல் இவர்கள் Eric Worre எனும் ஒரு நெட்வேர்க் மார்கடிங் குருவை சந்தைப்படுத்தலுக்கு சேர்ததுக்கொள்ள குறிப்பாக வியட்நாமில் இதில் அதிக முதலீடு செய்யப்பட்டது. Vitae Token இன் விலை அதிகரித்து 12 டாலர் வரை சென்று இப்போது 4 டாலரில் நிற்கிறது. இந்த தளத்திற்கு அதிக web traffic வருவது இந்தியா, பங்காளதேஷ், வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்துதான். அதாவது 70% traffic. வியட்நாம் வர்த்தக அமைச்சு இந்த pyramid முறை பற்றி எச்சரிக்கை ஒன்றையும் செய்திருக்கிறது.
Mendy Zickermen இன் நோக்கம் ஏழைகளுக்கு வருமானத்தை ஏற்படுத்திக்கொடுப்பது ஆனால் உறுப்பினர்களாக சேர்ப்பதும் அவர்களிடம் மாதாமாதம் 200 டாலரும் அதற்கு மேல் இன்னும் பல அம்சங்களும் வாங்க வேண்டுமென ஒரு விதி இருப்பது முரண்பாடாக இருக்கிறது. மேலும் கோடிகளில் இவர்களுக்கு இலாபம் கிடைக்குமாம். இணைய வசதி மற்றும் ஒரு ஸமார்ட் போன் வாங்க வசதியில்லாத மக்களுக்கு எப்படி இதில் வந்து சம்பாதித்து அதுவும் crypto currency marketல போய் Bitcoin க்கு மாற்றி அதை இன்னொரு நாணயத்திற்கு மாற்றுவது. அதுவும் அவர்கள் இந்த பணம்போட்டு விளையாடும் விளையாட்டை நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் மக்களின் வரவேற்பில்லாத பதிவு அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும்.
சரி இவர்களின் இப்போதைய compensation plan எப்படி இருக்கிறது என்பதை சுறுக்கமாக பார்க்கலாம்.
மூன்று முறையில் வருமானம்
Purpose matrix
இதுதான் இப்போதைக்கு அதிக இலாபம் தரும் முறை. அதாவது pyramid scheme முறையில் ஆள் சேர்க்க வேண்டும்.
Garden matrix
இது எவ்வாறு வழங்கப்படுகிறது என யாருக்கும் தெரியாது. ஏதோ algorithm எனச சொல்லி நலுவி விடுகிறார்கள். இதில் இப்போதைக்கு வருமானம் இல்லை ஆனால் public launch இன் பின் நல்ல வருமானம் கிடைக்குமாம். ஆகவே இங்கே units இப்போதே வாங்க வேண்டும்.
Destiny matrix
இது 200 டாலர் புதிய உறுப்பினர்களின் சிலருக்கு வழங்கப்படும். 50% மான புதிய உறுப்பினர்களுகு என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த 50% ஐ யார் சரியாக கண்டது.
ஒரு வியாபார முறையில் கற்பனையில் கோடிகள் வரும் என்று திட்டமிட முடியாது Facebook சம்பாதிப்பதால் அதையே நாங்களும் சம்பாதிப்போம் என கோட்டை கட்டாமல் ஒரு முறையான feasibility study report இருக்க வேண்டும். அதன் அடுப்படையில்தான் முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.
Purpose matrix ஒரு முழுமையான pyramid scheme. அதில் எப்போதுமே உறுப்பினர் எவ்வளவு சம்பாதிப்பார் என மூளைச்சலவை செய்யப்படுகிறதே தவிர முழுமையான தகவல்கள் சொல்லப்படுவதில்லை. அவர்கள் 100% மக்களுக்கு கொடுக்கும் முறையை பாருங்கள்?
ஒரேயொரு block இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த matrix 3x8 அளவைக்கொண்டது அதாவது 8 படிநிலைக்கு மேல் கமிஷண் கிடைக்காது. அதற்கு மேல் ஆள் சேர்த்தால் அது sponsor commission பட்டியலில் வரும். மொத்தமாக 9,841 பேர் இந்த block இல் வரலாம். ஒருவரிடம் 200 டாலர் பெற்றால் மொத்தம் 1.9 மில்லியன் டாலர் காசு சேரும். ஒவ்வொரு படிநிலை கமிஷணின் படியும் முதலாவது மாத வருமானத்தில் 200 டாலர் பிடித்து வைக்கப்படுவதனாலும் மொத்தமாக இந்த block இலிருந்து உறுப்பினர்களுக்கு செலுத்தப்படுவது 252,000 டாலர் மாத்திரமே. அதாவது 13%. Vitae நிறுவனம் வைத்துக்கொள்வது 1.7 மில்லியன். இணைப்பை பார்க்க.
இதில் நீங்கள் ஆரம்பத்தில் மூன்று பேர் சேர்த்தாலும் உங்கள் 200 டாலர் கிடைக்காது ஏனெனில் அதை அடுத்த மாத upgrade க்காக பிடித்துக்கொள்வதால் உங்கள் down line இல் 2வது படிநிலையில் 9 பேர் சேர்த்தபிறகே 200 டாலர் கிடைக்கும். இடையில் இதைவிட்டு விலகும் பலரின் நிலை அதே கதிதான்.
7,8 ஆம் படிநிலையில் இருப்பவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது. அவர்களது படிநிலை உயர்ந்து அதாவது உறுப்பினர்கள் அவர்களுக்கு கீழ் சேரும் வரை.
இன்னும் ஏனைய matrices இப்போதைக்கு அவ்வளவு வருமானத்தை தரமாட்டாது. உங்கள் உறுப்பினர் சேர்க்கும் நடவடிக்கையைப் பொருத்தே அதுவும் கிடைக்கும். ஆனால் காலம் செல்லும்.
இப்போதைக்கு இதில் இணைந்திருக்கும் அனைவரும் காசுபோட்டு அதிக பணம் சம்பாதிக்க ஒரு விளையாட்டு விளையாடுவதைத் தவிர வேறு வியாபாரம் இல்லை. மேலும் Vitae Token இன் விலை குறைந்தால் கிடைக்கும் வருமானமும் குறையும்.
இந்த pyramid scheme இல் அதிகமாக அதிபர்களும் ஆசிரியர்களும் சிக்கிக்கொள்வது கவலையளிக்கிறது.
இந்த Vitae Scoail Media platform launch ஆகலாம் ஆகாமலும் இருக்கலாம் ஆனால் அவர்களின் இந்த compensation pyramid முறை பல சந்தேகங்களைக் கொண்டது. எனவே பணத்தை ஒரு risk நிறைந்த மேலும் கேள்விக்குறியாக இருக்கும் இலாப்ப் பங்கீட்டு முறையிலும் விரயம் செய்யாமல், அப்படி ஒரு social media வருமென்றால் அது public launch செய்த பிறகு அதில் like units and credits வாங்கி, membership upgrade செய்து உங்கள் ஈடுபாட்டில் இலாபம் அடையலாம்.
Vitae ல் 50,000 உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதாக சொல்லகிறார்கள் ஆனால் டுவிடர்ல 5,000 பேரும் Facebook pageல 3,000 பேரும்தான் இருக்கிறார்கள். அதில் அதிகமானவர்கள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாட்டவர்கள்.
Vitae இன் திட்டங்கள் அத்துடன் இலாப பகிர்வு பற்றிய அதிகமான யூடியூப் வீடியோக்கள் இருக்கின்றன. மேலதிக தகவல்களை இணையதளத்தில் தேடிப்பாருங்கள்.
இங்கு நான் crypto currency சந்தை பற்றி விபரிக்கவில்லை. அது வேறொரு தலைப்பு.
உங்கள் பணம் உங்கள் முதலீடு, நான் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. ஆனால் pyramid scheme மார்க்கத்தில் அனுமதி இல்லை என மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.



No comments:
Post a Comment