#humanrightsorganisation, #nationalhonours2019
இப்போது இலங்கையில் வீட்டுக்கு ஒரு Human Rights Organization உருவாகி இருக்கிறது. நல்ல முன்னேற்றம்தான். ஆனால் இவர்கள் அடிப்படை மனித உரிமை மீறல் அது தொடர்பான பிரச்சனைகள் பற்றி மட்டும் கவனம் செலுத்தாமல், அமைப்பிற்கு உறுப்பினர்கள் சேர்த்து மாதாமாதம் கட்டணமும் இரண்டு மாத்த்துக்கு ஒரு முறை விருது (காசு கொடுக்கனும்) விற்கும் வைபவமும் நடாத்துவதுமாக இருக்கிறார்கள். சரி விருதுகள் கொடுப்பது அவர்களது உரிமை, வாங்குவதும் அதன் உறுப்பினர்களின் உரிமை. ஆனால் அது என்ன Human Rights என்ற வசனத்தை சேர்த்துக்கொண்ட அதிகமான சமூக சேவை அமைப்புக்களும் அரசால் மட்டுமே வழங்கப்படும் தேசிய விருதுகளான தேசமானி, தேசபந்து மேலும் அனைத்து அரச பட்டங்களையும் வழங்குகிறார்கள். இது பெரிய ஏமாற்று.
ஒரு தேசமானி அரச விருது வழங்கப்படும் விழா எவ்வாறு நடைபெறுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் இருப்பது, இந்த ஏமாற்று கூட்டத்தின் வலையில் விழுவதற்கு ஏதுவாக இருக்கலாம்.
ஆகவே இலங்கை அரசினால் இறுதியாக நடந்த தேசிய விருதுகள் 2019 நிகழ்ச்சியின் ஒரு பகுதியை இங்கே பதிவிடுகிறேன். முழுமையான நிகழ்ச்சியை YouTube இல் national honours 2019 Sri Lanka என தேடினால் கிடைக்கும்.
முதலில் தேசிய விருதுகள் (தேசமானி, தேசபந்து, கலாகீர்த்தி, மற்றும் பல) பெறுபவர்களின் பெயர் பட்டியல் அரச வர்த்மானியில் வெளியிடப்படும். இந்த கெளரவப் பட்டங்கள் இலங்கை நாட்டின் ஜனாதிபதியினால் மாத்திரமே வழங்கிவைக்கப்படும். இதற்கான மும்மொழிவுகளை ஜனாதிபதி செயலகமே ஆய்வு செய்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்.
நாட்டுக்கு பலதுறைகளில் பாரிய பங்காற்றிய நபர்களுக்கு மாத்திரமே இவ்விருதுகள் கொடுக்ப்படும். தவிர இந்த ஏமாற்றுப் பேர்வளிகள் டான் பிரசாத்துக்கு கொடுத்து போல் இவைகளைக் கொடுப்பதில்லை.
No comments:
Post a Comment